வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்...

மூணாறு இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலையில் வரையாடு குட்டிகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது.
வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்...
Published on
தேனி மாவட்டத்திற்கு அருகில் உள்ள மூணாறு இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலையில் அழிந்து வரும் இனமான வரையாடுகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் வரையாடுகளின் பிரசவக்காலம் கடந்த ஜனவரியில் தொடங்கியதை அடுத்து அவற்றை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. வரையாடுகளின் பிரசவக்காலம் தற்போது முடிந்த நிலையில் வரையாடு குட்டிகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. 30 இடங்களில் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கி 15ஆம் தேதி நிறைவடையும் என வனத்துறை அதிகாரி லட்சுமி அறிவித்துள்ளார். கேரளாவின் திருச்சூர் வன மற்றும் விலங்கின கல்லூரி மாணவ மாணவிகள் இந்த பணியில் ஈடுபட உள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com