பெண் தற்கொலையில் சந்தேகம்-உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்

x

பெண் தற்கொலையில் சந்தேகம்-உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்

சேலத்தில் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை வைத்திருந்த ஆம்புலன்ஸை சாலையில் நிறுத்தி, உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவருக்கும் லாரி ஓட்டுனர் குமாருக்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில், பிரியாதர்ஷினி அவரது வீட்டில் லாரி என்ஜின் பெல்ட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தனது மகளின் முகத்தில் காயம் உள்ளதால், இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், கணவர் குமாரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி பிரியதர்ஷினியின் தாய் மற்றும் உறவினர்கள் உடலை வைத்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்