பெண் இறப்பில் சந்தேகம் - உறவினர்கள் சாலை மறியல்

பெண் இறப்பில் சந்தேகம் -  உறவினர்கள் சாலை மறியல்
x

பொள்ளாச்சி அருகே பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பக்கோதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனுக்கும், மனைவி மலர்விழிவிக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மலர்விழி தற்கொலை செய்துகொண்டதாக பெண்ணின் தந்தைக்கு மணிகண்டன் தெரிவித்ததையடுத்து, மலர்விழி வீட்டிற்கு சென்ற உறவினர்கள், அவரது உடம்பில் காயம் ஏற்பட்டு இருப்பதை கண்டு போலீசில் புகார் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மலர்விழியின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் யாரும் மருத்துவ மருத்துவமனைக்கு வராததால், மலர்விழியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அரசு மருத்துவமனை முன்பு மலர்விழியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்