கல்லூரி மாணவர் மரணத்தில் சந்தேகம்-உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

x

தண்டவாளத்தில் கழுத்தில் காயங்களுடன் இரண்டு துண்டுகளாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கொமக்கம் பேடு கிராமத்தைச் சேர்ந்த சேகர்-ரேணுகா தம்பதியரின் மகன் விஜயகுமார், கல்லூரி மாணவரான இவரை 7 நாட்களாக காணவில்லை என பெற்றோர் தேடிய நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இதனையடுத்து விஜயகுமார் திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு இறந்ததாக பெற்றோருக்கு போலீசார் தகவல் அளித்தனர். பின்னர் உடலை பார்த்த உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்