3 மாதம் வெறும் ஜூஸை மட்டும் குடித்து `வாட்டர் டயட்'-மூச்சு விடமுடியாமல் துடித்து நின்ற உயிர்
3 மாதம் வெறும் ஜூஸை மட்டும் குடித்து `வாட்டர் டயட்' - மூச்சு விடமுடியாமல் துடிதுடித்து நின்ற உயிர்
கன்னியாகுமரி மாவட்டம் குளைச்சலில ஆன்-லைன் வீடியோவை பார்த்து டயட் இருந்த சிறுவன் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. வெறும் ஜூஸ் மட்டும் குடிச்சு உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால் என்ன விதமான ஆபத்து நேரிடும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பர்னட்டிவிளை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் சக்தீஷ்வர், பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான கவுன்சிலிங்காக காத்திருந்திருக்காரு. தந்னோட உடல் எடை அதிகமாக இருக்குறதா நினைச்சு கவலைபட்ட சக்தீஷ்வர், கல்லூரி சென்றால் கேலிக்கு உள்ளாகுவோமோ என்று டயட் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆன்-லைன் வீடியோவை பார்த்து திட உணவு எதுவும் சாப்பிடாமல் ஜூஸ் மற்றும் தண்ணீர் மட்டுமே குடித்து உடல் எடையை அவர் குறைக்க முயற்சி செய்திருக்கிறார். திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். இன்றைய இணைய உலகில் சோசியல் மீடியா மருத்துவ குறிப்புகளையும், டயட் குறிப்புகளையும் சிறார்கள், இளைஞர்கள் பின்பற்றுவது பெரும் ஆபத்தமான விஷமாகவே இருக்கிறது. சமீபத்தில் கேரளாவிலும் உடல் எடையை குறைக்க விரும்பி தண்ணீரை மட்டும் குடித்துவந்த 18 வயது இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
