சுற்றிவளைத்த கொள்ளையர்கள்.. நடுக்கடலில் தமிழர்களுக்கு பயங்கரம்

x

மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கற்களை வீசி ,தாக்குதல் நடத்தியது மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் செருதூர் மீன்பிடித் துறைமுகத்தை சேர்ந்த மீனவர்கள்,கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தனர்.அப்போது அவர்களை சுற்றிவளைத்த கடற்கொள்ளையர்கள்,மீனவர்களின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பறித்தும் சென்றுள்ளனர்.

இதையடுத்து அவசர அவசரமாக கரை திரும்பிய மீனவர்கள் பாதிக்கப்பட்ட மீனவர்களை நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்