பட்டியலின பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்த இளைஞருக்கு உச்ச நீதிமன்றம் சர்ப்ரைஸ்

x

பட்டியலின பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்த இளைஞருக்கு ஜாமீன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பட்டியலின திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக சிறையில் அடைக்கப்பட்ட இளைஞருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நவீன், வைத்தீஸ்வரி என்ற பட்டியலின பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.

இதன்பேரில், நவீன் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது தன்னால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள நவீன் சம்மதித்ததை அடுத்து அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

மேலும், திருமணம் செய்து கொண்டதற்கான அழைப்பிதழ், புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்