

இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால் , ஆர்யா உள்ளிட்டோர் நடித்த காப்பான் திரைப்படம் 20ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் தனது சரவெடி என்ற கதையை பயன்படுத்தி, காப்பான் படத்தை எடுத்திருப்பதாக கூறி குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, நீதிபதி மணிக்குமார் அமர்வில் இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.