அதிர்ச்சி கொடுத்த தீர்ப்பு.. உச்ச நீதிமன்ற படியேறிய SV சேகர்

x

சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக் கருத்தை பதிவிட்ட வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், இடைக்கால தடை கோரியும் எஸ்.வி.சேகர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எஸ்.வி.சேகருக்கு சென்னை எம்.பி.- எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்து, கடந்த ஜனவரி 2-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்