இடமாறுதல் இடஒதுக்கீடு - உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில், பணியிடமாறுதல் பெறுபவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை வழங்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை, உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இடமாறுதல் இடஒதுக்கீடு - உச்சநீதிமன்றம் உத்தரவு
Published on

தமிழகத்தில் ஒரு துறையில் இருந்து வேறொரு துறைக்கு இடமாறுதல் பெறுபவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில், நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்தில் ஒரு துறையிலிருந்து, வேறு துறைக்கு இடமாறுதல் பெறுபவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை வழங்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை, ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இடமாறுதல் காரணமாக வேறு துறையில் பணிபுரிவோருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com