தட்கல் டிக்கெட் தொடர்பான வழக்கு - உச்ச நீதிமன்றம் அதிரடி

x

தட்கல் ரயில் டிக்கெட் பதிவு முறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இது தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த கௌரி சங்கர் சுகவனம் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

இந்த பொதுநல மனுவை நேரடியாக விசாரிக்க முடியாது. உயர்நீதிமன்றத்தை நாடுங்கள். பொதுவாக பொருளாதாரம் சார்ந்த அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது. தட்கல் முறையிலான ரயில் டிக்கெட் பதிவு முறை அனைத்து அம்சங்களையும் ஆராாய்ந்துள்ளது எனக் குறிப்பிட்டு பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்