தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க உத்தரவிடக்கோரி, மதுரையை சேர்ந்த கே கே ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, இன்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.