தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பி.சி.சி.ஐ.யின் புதிய சட்ட விதிமுறைகளை ஏற்காமல் இருந்ததால் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலை நடத்த அனுமதி அளித்துள்ளது. கிரிக்கெட் நிர்வாக குழுவின் புதிய விதிமுறைக்கு உட்பட்டு தேர்தல் இருக்க வேண்டும் எனவும் தேர்தல் முடிவுகள் இந்த வழக்கின் இறுதி முடிவுக்கு உட்பட்டது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.