ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் சென்னையில் இசைக்கச்சேரி நடைபெற்றது. ப்ரண்ட்என்டர்ஸ் பவுண்டேஷன் சார்பில் மைலாப்பூர் மியூசிக் அகாடமியில் அருணா சாய்ராமின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக கிடைக்கும் நிதியை கொண்டு ஆதரவற்ற முதியவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து, உணவு, உடை, மருத்துவ வசதி உள்ளிட்டவை செய்து கொடுக்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதேபோல் முதியவர்களை பாதுகாக்க வேண்டியது நமது அனைவரின் கடமை என அருணா சாய்ராம் தெரிவித்தார்.