பிரபல நடிகர்களுக்கு Dr*gs சப்ளை.. சென்னையில் சிக்கிய முக்கிய `கை'
சென்னையில் நடிகர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த நபர்களுக்கு, மொத்தமாக விற்பனை செய்து வந்த மாங்காட்டைச் சேர்ந்த தினேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். போதைப்பொருள் வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்த், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் ஆகியோருக்கு போதைப்பொருள் விற்றதாக பிரதீப் குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, மாங்காட்டை சேர்ந்த தினேஷ் என்பவர், தாய்லாந்தில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி வந்து, மொத்தமாக விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 14 கிராம் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
Next Story
