முத்துநகர், பொதிகை, குருவாயூர், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்ஸில் சூப்பர் மாற்றம்

x

புத்தாண்டு முதல் 65 விரைவு ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் விரைவு ரயில், கோவை இன்டர்சிட்டி, நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ஐந்து முதல் 10 நிமிடங்கள் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட இடத்தை சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேபோன்று நாகர்கோவில் விரைவு ரயில், குருவாயூர் விரைவு ரயில், பொதிகை விரைவு ரயில் ஆகியவை 20 நிமிடங்கள் முன்கூட்டியே சென்று சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடியில் இருந்து புறப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகபட்சமாக 30 நிமிடங்கள் முன்கூட்டியே தனது சேருமிடத்தை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்