ஊட்டி செல்வோருக்கு சூப்பர் சான்ஸ்

x

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டது... சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என அறிவித்தது. முன்பதிவு செய்து மலை ரயிலில் பயணம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிறப்பு மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் காலை முதலே மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் குவிந்தனர். மலை ரயிலில் 200க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்