"கோடை கால பயிற்சி வகுப்பு நடத்த கூடாது.." - மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை

x

கோடை விடுமுறை நாட்களில் பள்ளிகளில் கோடைக்கால பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை நாட்களில் செயல்படக் கூடாது என்றும், பள்ளிக் குழந்தைகளை எந்த வித வகுப்பிற்கும் வரவழைக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிபந்தனைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்