தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில், அடுத்த சில நாட்களில் கனமழைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மே முதல் வாரத்தில் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.