சூலூர் எம்.எல்.ஏ., கனகராஜ் காலமானார் - பன்னீர்செல்வம், பழனிசாமி இரங்கல்

சூலூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ் மறைவுக்கு, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சூலூர் எம்.எல்.ஏ., கனகராஜ் காலமானார் - பன்னீர்செல்வம், பழனிசாமி இரங்கல்
Published on
சூலூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ் மறைவுக்கு, துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம், முதலமைச்சரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கட்சி மீது மிகுந்த விசுவாசம் கொண்டு பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய கனகராஜின் திடீர் மறைவு, மிகுந்த மனவேதனையை தருவதாகவும்,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் இரங்கல் செய்தியில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேபோல, தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் பழனிசாமி, தனியாக இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com