சூலூர் : மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு - திருடனை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய பொதுமக்கள்

கோவை மாவட்டம், சூலூர் பொன்விழா கலையரங்கம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.
சூலூர் : மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு - திருடனை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய பொதுமக்கள்
Published on
கோவை மாவட்டம், சூலூர் பொன்விழா கலையரங்கம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இதனையடுத்து மூதாட்டி கூச்சலிட, மர்மநபர் வாகனத்தை வேகமாக ஓட்டி சென்று தடுமாறி கீழே விழுந்தார். பொதுமக்கள், திருடனை பிடித்து தாக்கி மரத்தில் கட்டி வைத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து திருடனை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், பிடிப்பட்டவர் மதுரையை சேர்ந்த ரவிச்சந்திரன் என தெரியவந்தது.
X

Thanthi TV
www.thanthitv.com