தகாத உறவால் அழிந்த குடும்பம் - தற்கொலை செய்தவர் கடிதம்

தகாத உறவால் அழிந்த குடும்பம் - தற்கொலை செய்தவர் கடிதம்
Published on

தகாத வாழ்க்கை முறையால் தன் குடும்பம் அழிந்ததாகக் கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு மருந்துக்கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த விஜயன், அதே பகுதியில் மெடிக்கல் ஷாப் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மீனாட்சி, மகன் யுவனேஸ் மற்றும் மகள் பவித்ரா ஆகிய மூவரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 6 ம் தேதி மீனாட்சி, பவித்ரா, யுவனேஸ் ஆகிய மூவரும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவான விஜயனைத் தேடி வந்தனர். இந்த நிலையில் இச்சிபுதூர் ரயில் நிலையம் அருகே விஜயன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடைமைகளைச் சோதனை செய்த போது அவர் எழுதிய கடிதத்தை எடுத்துள்ளனர். அதில் தன் குடும்பம் அழியக் காரணம் கடன் பிரச்சனை அல்ல தகாத வாழ்க்கை தான் காரணம் எனவும், இவை அனைத்துக்கும் பெண் ஒருவர் தான் காரணம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com