காவல்நிலையத்திற்குள் ஒருவர் தற்கொலை - கமிஷனர் விளக்கம்
காவல்நிலையத்திற்குள் ஒருவர் தற்கொலை - கமிஷனர் விளக்கம்
கோவையில் காவல்நிலையத்திற்குள் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர வைத்துள்ளது. கடைவீதி பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் அறையில் இருந்த மின்விசிறியில் வேட்டியை கட்டி அந்த நபர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தற்கொலை செய்வதற்கு முன், அந்த நபர் காவல்நிலையத்திற்குள் அங்கும் இங்கும் நடக்கும் சிசிடிவி காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அந்த நபர் யார் என்பதை கண்டுபிடித்துள்ளனர். உயிரிழந்த நபர் பேரூரைச் சேர்ந்த ராஜன் என்றும், கடந்த சில நாட்களாக அந்த நபர் மன அழுத்ததில் இருந்ததாகவும் கோவை மாநகர ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
பணியின் போது கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள கோவை மாநகர காவல் ஆணையர், இதை லாக்கப் டெத் என்று சொல்ல முடியாது என்றும் காவல்நிலையத்தில் நடந்த தற்கொலை எனவும் தெளிவுப்படுத்தினார்.
