செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்
திருப்பூரில் மாற்றுத் திறனாளி ஒருவர் திடீரென செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் கால்களை இழந்த இவர், மாற்று திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் கேட்டு 2023ஆம் ஆண்டில் இருந்தே விண்ணப்பித்து வந்துள்ளார். ஆனாலும் இதுவரை கிடைக்காததால் மனமுடைந்த அவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க செய்தனர்.
Next Story

