குடும்பத்துடன் தற்கொலை முயற்சி - சிறுவன் உயிரிழப்பு

x

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கணவர் இறந்த துக்கத்தில், 2 குழந்தைகளுக்கு கழிவறை கழுவ பயன்படுத்தும் அமிலத்தைக் கொடுத்து விட்டு, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கே.புதுப்பட்டியைச் சேர்ந்த சங்கீதா என்பவரின் கணவர் சபாபதி, விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் 3 மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியில் இருந்த சங்கீதா, தனது 7 வயது மகள் சஷ்டிகா , 3 வயது மகன் சர்வேஸ்வரன் ஆகியோருக்கு கழிவறை கழுவ பயன்படுத்தும் அமிலத்தை கொடுத்து விட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மூவரையும் மீட்டு உறவினர்கள், திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சர்வேஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகள் சஷ்டிகாவும், தாயார் சங்கீதாவும் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து புழுதிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்