காவல்நிலைய வாயிலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி

x

சென்னை ஆர்.கே நகர் காவல் நிலைய வாயிலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்,

95 சதவீத தீக்காயத்தடன் உயிருக்கு போராடி வருவதால் குடும்பத்தினர் சோகமடைந்துள்ளனர்.

புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜன் என்பவர், ஆர்.கே.நகர் காவல் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மது வாங்கி அருந்தியபோது, அங்கு மப்டியில் வந்த போலீஸ்காரர், வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. ராஜன் பணத்தை தராத நிலையில் தொடர்ந்து வற்புறுத்தியதால் அதுகுறித்து புகார் அளிக்க காவல்நிலையம் வந்துள்ளார். அப்போது, புகாரை பெறாமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதனால் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



Next Story

மேலும் செய்திகள்