120 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி - போராடி காப்பாற்றிய தீயணைப்புத்துறை

120 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி - போராடி காப்பாற்றிய தீயணைப்புத்துறை
Published on

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே 120 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை, தீயணைப்புத்துறையினர் போராடி காப்பாற்றினர். நடு ஆறுபுளியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மனைவி அருள் மேரி, குடும்ப பிரச்சனையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சகாயகண்ணன் என்பவரின் தோட்டத்தில் உள்ள 120 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் கயிறு மூலம் அருள் மேரியை காப்பாற்றினர்.

X

Thanthi TV
www.thanthitv.com