ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சி

ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சி
Published on
• கள்ளக்குறிச்சி மாவட்டம் கடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரோகிணி என்பவரிடம் செந்தில்குமார் என்பவர் 19 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பல வருடம் ஆகியும் செந்தில்குமார் பணத்தை திருப்பி தராததால், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ரோகிணி புகார் அளித்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரோகினி மண்ணெண்ணெய் கேனுடன் சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. • பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com