காவல் நிலையத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி

x

சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்த இளைஞர் காவல் நிலையம் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

இன்று காலை 6:30 மணி அளவில் திருட்டு முயற்சி வழக்கில் சந்தேகத்தின் பேரில் வேளச்சேரி போலீசார் ஒரு நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

எச்சில் துப்ப போவதாக கூறி காவல் நிலையம் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து அந்த நபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி.

காவல் நிலையத்தில் இருந்து எகிறி குதித்த நபர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஜா என்பவர் தெரியவந்துள்ளது.

திருட்டு வழக்கு சம்பந்தமாக விசாரிக்க அழைத்து வந்த போது நிகழ்ந்ததாக தகவல்.


Next Story

மேலும் செய்திகள்