கரும்பு சாறுடன் 37 வகையான மூலிகை கலந்து விற்பனை செய்யும் வியாபாரி...

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, கரும்பு சாறுடன் 37 வகையான மூலிகை கலந்து விற்பனை செய்து வருகிறார் ஒருவர்.
கரும்பு சாறுடன் 37 வகையான மூலிகை கலந்து விற்பனை செய்யும் வியாபாரி...
Published on

கரும்பு சாறுடன் 37 வகையான மூலிகை

மன்னார்குடி மேலராஜவீதியில் சலையோரத்தில் 25 ஆண்டுகளாக கரும்பு சாறு கடை வைத்திருப்பவர் பண்டரிநாதன். பச்சை ஆடை அணிந்து எப்போதும் பரபரப்பாக காணப்படும் இவரது கடைக்கு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என கூட்டம் எப்போதும் அலைமோதுகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப, 37 வகையான மூலிகை கலந்து விற்கிறார்.. ... பணத்திற்காக மட்டுமில்லாமல், மக்களின் நலனுக்ககாகவே மூலிகை கலந்து கரும்பு சாறு விற்பதாக அவர் அக்கறையுடன் தெரிவிக்கிறார்.. வயிற்று புண், உடல் சூடு, கண் பிரச்சினை என பல பிரச்சினைகளுக்கு இவரது ஜுஸ் மூலம் தீர்வு கிடைக்கிறது.. பண்டரிநாதன், கரும்பு ஜூஸ் கடைக்காரர். தன்னலம் கருதாது, மற்றவர்களின் உடல்நலனிலும் அக்கறை காட்டும் பண்டரிநாதனின் சேவையை பொதுமக்கள் வெகுவாகக் பாராட்டுகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com