மூச்சுத்திணறிய GST ரோடு... மண்டைக்கு ஏரிய சூடு... முட்டிமோதிய வாகனஓட்டிகள்
சென்னை பல்லாவரம்-குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் வரையிலான ஜிஎஸ்டி சாலையில் உள்ள வணிக வளாகங்களுக்கு வரும் மக்கள், தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். அதுமட்டுமின்றி சென்னையின் மையப் பகுதிகளில் பணிபுரியும் பொதுமக்கள், பணி முடிந்து புறநகர் பகுதிகளுக்கு திரும்பி செல்லும்போது ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்வதோடு, வாகன ஓட்டிகள் இடையே வாக்குவாதங்களும் ஏற்படுகின்றன.
Next Story
