திடீரென உள்வாங்கிய கடல்... பக்தர்கள் கண்களுக்கு தெரிந்த காட்சி... திருச்செந்தூரில் பரபரப்பு
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் திடீரென உள்வாங்கி காணப்பட்டது. இன்று அமாவாசை தினம் என்பதால் கடல் உள்வாங்கி காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கோவில் கடற்கரை பகுதியில் உள்ள செல்வதீர்த்தம் பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடல் 80 அடி உள்வாங்கியது. கடல் உள்வாங்கிய காரணத்தினால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகின்றன. மேலும் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பச்சை பாசிகள் படிந்த பாறைகள் மீது ஆபத்தை உணராமல் நின்று செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் வருகின்றனர்.
Next Story
