திடீரென பஸ்ஸை நிறுத்தி டிரைவர், கண்டக்டரை எச்சரித்த நீதிபதி-நடுங்கிய மாணவர்கள்

x

மாணவர்கள் படிக்கட்டில் பயணம் - ஓட்டுநர், நடத்துநரை எச்சரித்த நீதிபதி

விருத்தாசலத்துல அரசு பேருந்து படிகட்டுல மாணவர்கள் தொங்கியபடி போனத பார்த்து ஆத்திரம் அடஞ்ச நீதிபதி, ஓட்டுநர்-நடத்துநர கண்டிஞ்சிருக்காரு...

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணத்தில் ஈடுபட்ட மாணவர்களையும், அவர்களை ஒழுங்குப்படுத்த தவறிய ஓட்டுநர், நடத்துநரை நீதிபதி எச்சரித்து அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக கூட்டம் காரணமாக பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை கண்டு அறிவுரை கூறிய விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி, காவல்துறையினர் பேருந்து நிறுத்தத்தில் நின்று மாணவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளாமல் தடுக்குமாறு வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்