திடீரென பூமிக்குள் இருந்து வெளிவந்த அம்மன் சிலைகள்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட வேலங்குடி ஊராட்சி வடகரை மாத்தூர் பகுதியில் கோயில் திருப்பணிக்காக ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டும் போது சிலைகள் கிடைத்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. காசி விஸ்வநாதர் கோயில் அருகே மூன்றடிக்கு குழி தோண்டியபோது, ஒன்றரை அடி உயரமுள்ள அம்மன் சிலை, ஒரு அடி உயரம் உள்ள அம்மன் சிலை மற்றும் விளக்கு பூஜை பொருட்கள் இருந்துள்ளன. இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் சிலையை பற்றி விசாரணை மேற்கொண்டார்.
மேலும், சிலைகளும், பொருட்களும் எந்த காலத்தைச் சேர்ந்தவை என்பதும் தொல்லியல் துறையினரின் ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
