திடீரென வெடித்த டயர் - ஸ்பாட்டிலேயே 5 பேர் பலி.. திருவண்ணாமலை செல்லும்போது கோரம்

x

சொகுசு காரின் டயர் வெடித்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சொகுசு காரின் டயர் வெடித்து ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவனூர் கூட்டுரோடு பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் மாதவன், தனது குடும்பத்தினர் உள்ளிட்ட 10 பேருடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். அப்போது அத்திப்பாக்கம் என்ற இடத்தில் காரின் முன்பக்க டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்