திடீரென கேட்ட பயங்கர சத்தம் - ஓடி வந்து பார்த்த 50 குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி

x

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணமாக, 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் எலக்ட்ரானிக் சாதனங்கள் எரிந்து நாசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாராண்டபள்ளி அரசமரம் பகுதியில் ஏற்பட்ட உயர்மின் அழுத்தம் காரணமாக, வீட்டில் இருந்த எலக்ட்ரானிக் சாதனங்கள் எரிந்து நாசமானது. சுமார் 50 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருள்கள் நாசமான நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புதிய நஷ்ட ஈடு வழங்க கோரி கோரிக்கை வைத்துள்ளனர். மின்வாரிய அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், பழுதான மீட்டர்கள் மட்டுமே மாற்றி தரப்படும் எனவும், மின்சாதன பொருள்கள் சேதத்திற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாத என்றும் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்