திடீரென வெளியான அதிர்ச்சி அறிவிப்பு - மதுரையில் குவிக்கப்பட்ட போலீசார்

x

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள மளிகை கடையில் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வணிகர்கள் சங்கத்தினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பென்னிகுயிக் பேருந்து நிலையம் அருகில் உள்ள மளிகை கடையில், சிலர் துண்டறிக்கை கொண்டு வந்து பணம் கேட்டுள்ளனர். குறைந்த பணம் கொடுத்த காரணத்தினால், கடை மற்றும் அங்கிருந்த ஊழியர்களையும் தாக்கியுள்ளனர். இரு தரப்பிலும் மாறி மாறி தாக்கிக் கொண்ட நிலையில், போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தில் மாமூல் கேட்ட நபரை போலீசார் கைது செய்ய வில்லை என வணிகர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். மேலும், ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் வணிகர் சங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்