கோவையில் திடீர் ரெய்டு - லட்சக்கணக்கில் சிக்கிய பணம்
கோவை மாவட்டத்தில் உள்ள கே.ஜி. சோதனைச் சாவடி மற்றும் பொள்ளாச்சி கோபாலபுரம் போக்குவரத்து சோதனைச் சாவடிகளில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத 2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். கே.ஜி. சோதனைச் சாவடியில் இருந்து 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயும், பொள்ளாச்சி கோபாலபுரம் சோதனைச் சாவடியில் இருந்து 66 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு சோதனை சாவடிகளிலும் பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்கள், கூடுதல் பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிப்பதற்காக இந்த லஞ்சம் பெறப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
Next Story
