Ooty | Mudslide| ஊட்டியில் திடீர் மண் சரிவு
ஊட்டியில் திடீர் மண் சரிவு
#mudslide #ooty
உதகை எல்க்ஹில் பகுதியில் லேசான மண் சரிவு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், உதகை எல்க்ஹில் பகுதியில் அதிகாலை லேசான மண் சரிவு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை பெய்த மழையால் உதகை எல்க்ஹில் பகுதியில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. சாலையோரம் ஏற்பட்ட மண் சரிவால் மண் கழிவுகள் சுமார் 200 அடி வரை இழுத்துச் செல்லப்பட்டு விவசாய நிலத்தில் இருந்த கிணறு வரை சென்றதால், கிணற்று நீர் சேறும் சகதியுமாக மாறியது.
