இடி, மின்னலுடன் திடீரென கொட்டிய கனமழை - சட்டென மாறிய கிளைமேட்.. கூலான தமிழகம்
தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், கட்டுமன்னார் கோயில் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
கும்பகோணம் மாநகரில் இருந்தும், சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருவதால்
குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான திருக்கருகாவூர், பண்டாரவாடை , ராஜகிரி, திருப்பாலைத்துறை பகுதிகளில் திடீரென இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
சுமார் 2 மணி நேரத்திகு மேலாக பெய்த மழையால், சாலை மழைநீர் பாய்ந்தோடியது.
இதேபோல், சிதம்பரம் சுற்று வட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியதால்,
வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பலத்த காற்று வீசியதால், பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இரவில் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலையில் மழை நீர் ஓடியது. இரவு நேரத்தில் பெய்த மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இருப்பினும், வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் உருவாகியுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.