Theni | வறண்டு கிடந்த சின்னசுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - கொட்டித்தீர்த்த கனமழை
வறண்டு கிடந்த சின்னசுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - கொட்டித்தீர்த்த கனமழை தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் பெய்த கனமழையால், வறண்டு காணப்பட்ட சின்னசுருளி அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், கடந்த சில மாதங்களாக சின்னசுருளி அருவி நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது. இதனால் குடிநீர் திட்டமும் பாதிக்கப்பட்ட நிலையில், அருவி பகுதியை சீரமைக்கும் பணிகள் சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வந்தன. இந்நிலையில், மேகமலை பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டதுடன், மேற்கொள்ளப்பட்ட பணிகளும் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், சின்னசுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்
