நகராட்சி குப்பை கிடங்கில் திடீரென பற்றிய தீ -குபு குபுவென கிளம்பிய கரும்புகை.. அதிர்ச்சி காட்சி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நகராட்சி குப்பை கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதி புகை மண்டலமாக மாறியது. நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், எட்டயபுரம் சாலையில் உள்ள குப்பைக்கிடங்கில், கொட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை திடீரென குப்பைகள் தீ பிடித்து எரிந்தன. அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்கள் தீ பிடித்து எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனம், புகை மண்டலத்திற்குள் சிக்கியதால், தீயணைப்பு வீரர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சிறிது நேரம் கழித்து வாகனத்தை வெளியே எடுத்து, 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி, தீயை அணைத்தனர்.
Next Story