Nellai | திடீரென மாறி மாறி அடித்து கொண்ட இருதரப்பினர் - அலறிய மக்கள்.. தேவாலய வளாகத்தில் பரபரப்பு

திடீரென மாறி மாறி அடித்து கொண்ட இருதரப்பினர்

நுழைவு வாயில் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் கைகலப்பு நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே நூற்றாண்டு நுழைவு வாயில் அமைப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறியது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கிழவனேரியில் உள்ள தேவாலயத்தின் முன் நூற்றாண்டு நுழைவு வாயில் அமைப்பது தொடர்பாக ஆலய தர்மகர்த்தா மற்றும் முன்னாள் தர்மகர்த்தா தரப்பினருக்கிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் ஆராதனை முடிந்து விட்டு நுழைவு வாயில் அமைப்பது தொடர்பாக பேசி உள்ளனர். அப்போது இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஆண்களும் பெண்களும் மோதிக்கொண்டனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com