"காரணமேயில்லாமல் திடீரென ஏற்பட்ட நில அதிர்வு" - பீதியில் சென்னை மக்கள்

சென்னையில், அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக அச்சமடைந்த குடியிருப்புவாசிகள், சாலையில் தஞ்சமடைந்தனர்.

சென்னை கொரட்டூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 180 வீடுகள் உள்ளன. இந்நிலையில், நள்ளிரவு சுமார் 1 மணியளவில், இந்த குடியிருப்பில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. சில வினாடிகள் கட்டிடங்கள் குலுங்குவது போல் உணர்ந்த குடியிருப்புவாசிகள், உடனடியாக தங்களது குடும்பத்தினருடன் கட்டிடத்தை விட்டு வெளியேறி சாலைக்கு வந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர், அதிகாரப்பூர்வ நிலநடுக்கம் பதிவாகவில்லை என குடியிருப்புவாசிகளிடம் தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com