வண்ணாரப்பேட்டையில் திடீர் பரபரப்பு - உடனே விரைந்த MLA
ஆமை வேகத்தில் ஸ்மார்ட் சிட்டி பணி - வணிகர்கள் சாலை மறியல்
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணியால், வியாபாரம் பாதிக்கப்படுவதால் வணிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எம்சி ரோடு பகுதியில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு 5 மாதங்களுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கி, ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், வாடிக்கையாளர்கள் வருவது குறைந்து வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்கள், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். வாடிக்கையாளர்கள் வருவதற்கு வழி அமைக்கப்படும் என ராயபுரம் எம்எல்ஏ ஐ-ட்ரீம்ஸ் மூர்த்தி உறுதி அளித்ததை அடுத்து வணிகர்கள் கலைந்து சென்றனர்.
