Chennai | College Student | சென்னை ரயில்வே ஸ்டேஷனில் திடீர் பரபரப்பு.. 4 மாணவர்கள் அரெஸ்ட்
சென்னை தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட கல்லூர் மாணவர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரியில் பயிலும் மாணவர்கள், மீஞ்சூர், கும்மிடிபூண்டி, அனுப்பப்பட்டு, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புறநகர் மின்சார ரயில்களில் கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.
இந்த இரண்டு கல்லூரிகளின் மாணவர்கள் இடையே கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ரூட்டு தல விவகாராத்தில் மோதல் நீடித்து வருகிறது.
அந்தவகையில், கடந்த ஆகஸ்ட் மாதம், அனுப்பப்பட்டு ரயில் நிலையத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சச்சின் என்ற மாணவர் கொருக்குபேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்தநிலையில், நேற்று வழக்கம் போல் கையெழுத்திட ரயிலில் சென்றபோது மாநிலக் கல்லூரி மாணவர்களை சச்சின் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்களும் பதில் தாக்குதல் நடத்திய நிலையில் இருதரப்பினரும் கொருக்குபேட்டை காவல் நிலையத்தில் பரஸ்பரம் புகார் அளித்துள்ளனர்.
இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸார் நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரூட்டு தல விவகாரத்தில் இரு கல்லூரி மாணவர்கள் இடையெ பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் நீடித்து வருவது பெற்றோர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
