Tiruchendur Beach| சூரசம்ஹாரம் நடந்த திருச்செந்தூர் கடலில் திடீர் மாற்றம் - பக்தர்களுக்கு எச்சரிக்கை

சூரசம்ஹாரம் நடந்த திருச்செந்தூர் கடலில் திடீர் மாற்றம் - பக்தர்களுக்கு எச்சரிக்கை

#soorasamharam #thiruchendurmurugan #thiruchendurbeach திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் சுமார் 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால், பாறைகள் வெளியே தெரியும் நிலையில் பக்தர்கள் ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்து வருகின்றனர். கந்த சஷ்டி விழா நிறைவடைந்த நிலையில், கடல் உள்வாங்கியதைக் காண ஏராளமான பக்தர்கள் கடற்கரையில் குவிந்துள்ளனர். கடலுக்குள் இறங்கியும், வெளியே தெரியும் பாறைகள் மீது அமர்ந்தும் புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். கடலின் நீரோட்ட மாற்றத்தால் திடீரென கடல் மீண்டும் உள்ளே வர வாய்ப்புள்ளதால், பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

X