எல்லையில் திடீர் மாற்றம்... பஹல்காமின் தற்போதைய நிலை..? வெளியான முக்கிய தகவல்

x

பயங்கரவாத தாக்குதலால் வெறிச்சோடிய பஹல்காமுக்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் வரத்தொடங்கியதால் இயல்பு நிலை மெதுவாக திரும்பி வருகிறது. பஹல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலைத் தொடர்ந்து அங்கிருந்த சுற்றுலா பயணிகள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். சராசரியாக 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வரை நிறைந்து காணப்பட்ட பஹல்காம் பகுதி, கடந்த சில நாட்களாக வெறிச்சோடியது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குரோஷியா, செர்பியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், உள்நாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நம்பிக்கையுடன் வரத்தொடங்கியுள்ளதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்