திடீரென வந்த அறிவிப்பு - Erode To Trichy ரயில் பாதியில் நிறுத்தம்
Train Issue | திடீரென வந்த அறிவிப்பு - Erode To Trichy ரயில் பாதியில் நிறுத்தம்
ரயில் பாதியில் நிறுத்தம் - பயணிகள் வாக்குவாதம்
ஈரோட்டில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் விரைவு ரயில், முன்னறிவிப்பின்றி கரூரில் நிறுத்தப்பட்டது. இதனால் 1 மணி நேரத்திற்கு மேலாக கைக்குழந்தைகளுடன் அவதிக்குள்ளான பயணிகள், ரயில் நிலைய மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் இருந்து திருச்சி செல்லும் ரயில்வே பாதையில், திருச்சி கோட்டை அருகே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக கூறி, 3 மணி நேரத்திற்கு மேலாக இந்த வழியில் ரயில்கள் இயங்காது என சேலம் கோட்டை ரயில்வே நிர்வாகம் திடீரென அறிவிப்பு வெளியிட்டது. இதனால் அந்த ரயிலில் பயணித்த அனைவரும் கரூரிலேயே இறக்கிவிடப்பட்டனர்.
Next Story
