"இப்படி ஒரு கண்டக்டர்-ஆ!" தீயாய் பரவும் வீடியோ -கொண்டாடும் பயணிகள்
மதுரையில் அரசு பேருந்து நடத்துனர் ஒருவர் பயணிகளுக்கு பயண கட்டண விபரங்களை
கனிவாக எடுத்துரைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மதுரையில் இருந்து காரைக்குடி நோக்கி செல்லும் அரசு பேருந்து ஒன்றில் அரசு பேருந்து நடத்துனர் ஒருவர் பயண விவரங்களை சிறப்பாக எடுத்துரைத்தார்.
பேருந்து சந்திப்பு நிறுத்தங்கள், கட்டண விபரங்கள் மற்றும் பணமில்லா பரிவர்த்தனை செய்யும் முறை ஆகியவற்றை கனிவோடு புரியும் வண்ணம் எடுத்து கூறினார்.
இறுதியில் "இன்று இரவு இனிதாகட்டும், நாளைய விடியல் நல்ல நாளாக அமையட்டும்" என அவர் கூறியது பயணிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தற்போது இந்த வீடியோ வெளியாகியநிலையில் பேருந்து ஓட்டுநரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Next Story
